தாஜ்மஹாலை பார்க்க விரும்புறீங்களா..? உங்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு..!

தாஜ்மஹாலை பார்க்க விரும்புறீங்களா..? உங்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு..!
X
தேர்தல் ஷாஜகானின் நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முகலாய பேரரசர் ஷாஜகானின் காலகட்டத்தில் கட்டடக்கலை பொற்காலமாக இருந்தது. அவர் காலகட்டத்தில் கட்டப்பட்ட பிரபல கட்டிடம் தாஜ்மஹால். இது தற்போது உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இது ஷாஜகான் மும்தாஜ் மஹால் மீது கொண்ட காதலுக்காக தாஜ்மஹால் கட்டப்பட்டது.இந்நிலையில் ஷாஜகானின் 367வது உர்ஸ் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை ஆக்ரா தொல்பொருள் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தரைதளத்தில் உள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகளை காண மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பொதுமக்கள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
challenges in ai agriculture