கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு
X

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.25 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான விலை மாற்றம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.719க்கும், கொல்கத்தாவில் ரூ.745க்கும், மும்பையில் ரூ.719க்கும் சென்னையில் ரூ.735க்கும் விற்பனையாகும். எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிவற்றை பொருத்து வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்