ஒரே நாளில் 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி

ஒரே நாளில் 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி
X

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 71.10 சதவீதம் பேர், மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் மட்டும் 17,864 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1,970 பேருக்கும், பஞ்சாப்பில் 1,463 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் சிசிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2.34 லட்சமாக உள்ளது.இன்று காலை 7 மணி வரை 3.5 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 1,15,89,444 பேர்.

60வது நாளான நேற்று 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு (21,17,104) தடுப்பூசி போடப்பட்டது.இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,10,45,284-ஐ தொட்டது. இது 96.56 சதவீதம்.கடந்த 24 மணி நேரத்தில் 188 பேர் உயிரிழந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!