திருவனந்தபுரத்தில் மேயர் ஆனார் 21 வயது மாணவி

திருவனந்தபுரத்தில் மேயர் ஆனார் 21 வயது மாணவி
X

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 21 வயதே ஆன கல்லுாரி மாணவி மேயர் ஆனார்.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 47 வது வார்டில் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் (21) போட்டியிட்டார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேயர் தேர்தலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் இன்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று திருவனந்தபுரம் மாநகராட்சியில் வாக்கெடுப்பு நடந்தது. இடது முன்னணி சார்பில் ஆர்யா ராஜேந்திரனும், பாஜக கூட்டணி சார்பில் சிமி ஜோதிஷும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் மேரி புஷ்பமும் போட்டியிட்டனர். இதில் ஆர்யா ராஜேந்திரன் 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் சிமி ஜோதிஷுக்கு 35 வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மேரி புஷ்பத்துக்கு 9 வாக்குகளும் கிடைத்தன. ஒதொடர்ந்து ஆர்யா ராஜேந்திரன் புதிய மேயராக பொறுப்பேற்றார். அவருக்கு திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோஷா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!