இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
X
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று முந்தினம நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 183 ரன்கள் எடுத்திருந்தது. 184 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இந்திய அணி 2வதாக பேட்டிங் செய்தது. அதனைத்தொடர்ந்து 18வது ஓவரில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து T20 தொடரை இந்தியா கைப்பற்றியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!