ராஜீவ் காந்தி மறைந்த,இந்த நாள் - மே 21 தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம்
தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் (கோப்புபடம்)
முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம் தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21 அன்று கொலை செய்யப்பட்டதன் நினைவாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தீவிரவாதம் என்னும் சவாலை அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்கொள்வதையும், நாகரீக மற்றும் ஜனநாயக வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற கோட்பாட்டில் உறுதியாக இருக்கவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிகளுக்கு புறம்பாக ஒரு தனிப்பட்ட மனிதன் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உயிர், உடைமைகள், கண்ணியம் அல்லது நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றை பறிக்கும் எந்த ஒரு செயலும் பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் ஆகும்.
ஒரு அரசினை எதிர்ப்பவர்களை ராணுவம், காவல்துறை மற்றும் உளவுத்துறை மூலமாக கொல்வது, சித்திரவதை செய்வது, நாடு கடத்துவது போன்றவையும் பயங்கரவாதத்தின் ஒரு அங்கமே - இவை அரசு பயங்கரவாதம் என்று அழைக்கப்படும்.
தீவிரவாதம் உருவாக காரணங்கள் என்ன தெரியுமா? வேலைவாய்ப்பின்மை,வளர்ச்சியடையாத விவசாயம், குறைந்த சம்பளம்.பூகோளரீதியாக தனிமைபடுத்தப்படுதல்,நிலச்சீர்திருத்தங்கள்,நிர்வாகக் குறைபாடு - ஆகியவை தீவிரவாதம் வளர முக்கிய காரணிகளாக விளங்குகிறது.
கட்டுப்படுத்துதல். மோதிக் கொள்ளும் இரு தரப்பிற்கும் இடையில் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.தகுந்த பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்துதல் வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்தல்வேண்டும். தீவிரவாதிகளை கடுமையாக தண்டித்தல் வேண்டும்.இவை போன்றவற்றின் மூலம் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தலாம். அனைத்து அரசு அலுவலகங்களில் இன்று காலை 11 மணி அளவில் தீவிரவாதம் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொள்வார்கள்
தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி - மனித நேயம் காத்து,தீவிரவாதத்தை ஒழிப்போம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu