ஒடிசாவில் ஒருமாத குழந்தைக்கு கொரோனா.

ஒடிசாவில் ஒருமாத குழந்தைக்கு கொரோனா.
X
மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமான குழந்தை.

ஒடிசாவில் கொரோனா தொற்றிலிருந்து ஒரு மாத குழந்தை:குணமடைந்து மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது.

ஒடிசாவை சேர்ந்த பீரீத்தி அகர்வால்,அங்கித் அகர்வால் தம்பதியினருக்கு கடந்த மாதம் குடியா என்ற பெண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்து 25 நாட்களே ஆன நிலையில் திடீரென குடியாவுக்கு காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டது.

உடனடியாக குடியாவை மருத்துவமனையில் அனுமதித்து RTPCR பரசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 25 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்றுடன், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சைகளை தொடங்கினர்.

குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 10 நாட்கள் வெயிலில் வைத்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு பின்னர் சுவாசத்தில் முன்னேற்றம் ஏற்பட வென்டிலேட்டர் உதவியின்றி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 3 வார சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவை வென்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் குடியா செய்யப்பட்டார் .

இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர் என்ற சிறப்பைப் பெற்று மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக குடியா. திகழ்கிறார் என்பது மறுக்க முடியாதது

Tags

Next Story
ai marketing future