தடுப்பூசி தயாரிக்க முடியவில்லை-தூக்கில் தொங்க வேண்டுமா? மத்தியஅமைச்சர்
நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த அளவு எங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால், நாங்கள் என்ன தூக்கில் தொங்க வேண்டுமா? என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்
நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். நோய்த் தொற்றுக்கு ஆளாவதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி போதுமான அளவில் இல்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை கோவாக்சின், கோவிஷீல்ட் இரு தடுப்பூசிகள் மட்டுமே இருந்தாலும் போதுமான அளவு சப்ளை இல்லை.
இதுகுறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்னர். அதற்கு அவர் பதிலளிக்கையில், நாட்டில் ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நீதிமன்றங்கள் கருத்து தெரிவிக்கின்றன.நான் உங்களிடம் கேட்கிறேன்.
குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை நாளை தயாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த அளவு எங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால், நாங்கள் என்ன தூக்கில் தொங்க வேண்டுமா? தடுப்பூசி குறித்த எந்த முடிவையும் அரசியல் லாபத்துக்காகவோ அல்லது வேறு எந்தக் காரணத்துக்கவோ எடுக்கவில்லை. மத்திய அரசு 100 சதவீதம் நேர்மையாகப் பணியாற்றி வருகிறது என அவர் தெரிவித்தாராம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu