மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு

மாநிலங்களவை  தேர்தல் அறிவிப்பு
X

கேரளாவில் ஓய்வு பெறும் மாநிலங்களவை உறுப்பினர்களின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அப்துல் வஹாப், கே.கே.ராகேஷ், வயலார் ரவி ஆகியோர் ஏப்ரல் 21ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர்.

இதனால் இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்தல், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த தேர்தலை, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடத்தும்படி, கேரள தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலின் பார்வையாளராக, கேரள தலைமை தேர்தல் அதிகாரியை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Tags

Next Story
smart agriculture iot ai