நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்  நடத்த  தேர்தல் ஆணையம் முடிவு
X
The Election Commission has decided to conduct By-Elections

ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காலியாக உள்ள தலா ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்களை நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 17-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும்.

தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 23-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 30-ஆம் தேதி ஆகும். மார்ச் 31 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 3 ஆகும்.

உள்ளூர் திருவிழாக்கள், வாக்காளர்களின் எண்ணிக்கை, வானிலை நிலவரம், பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட விரிவான விதிமுறைகள் தேர்தல் நடவடிக்கைகளின்போது பின்பற்றப்படும்.

கடந்த 2020-ஆம் ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற தேர்தல்களுக்கான அனைத்து அறிவிப்புகளும் இடைத் தேர்தல்களுக்கும் பொருந்தும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!