பிரதமர் , இலங்கை அதிபர் இடையே நல்உறவு குறித்து தொலைபேசி உரையாடல்

பிரதமர் , இலங்கை அதிபர் இடையே நல்உறவு குறித்து  தொலைபேசி உரையாடல்
X

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு. கோத்தபய ராஜபக்சேவுடன் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

தற்போதைய நிகழ்வுகளின் வளர்ச்சி, இரு தரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடரும் கோவிட்-19 சவால்கள் உள்ளிட்ட விஷயங்களில் சம்பந்தப்பட்ட இருதரப்பு அதிகாரிகள் இடையே அவ்வப்போது தொடர்பை தொடர்ந்து மேற்கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

அண்டை நாடு முதலில் என்ற இந்தியாவின் கொள்கையில் இலங்கையின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!