கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
X

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்து 353 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அத்துடன் 1 இலட்சத்து 87 ஆயிரத்து 172 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.மேலும் நேற்று ஒரேநாளில் 76 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 57 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,244,624 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,897,486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!