பிளாட்பார்ம் டிக்கெட் உயர்த்தப்பட்டது ஏன் ?
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவே, ரயில்வேஸ்டேஷன்களில், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்திய ரயில்வே சார்பில், குறைந்த துார ரயில்களின் பயண கட்டணம், சமீபத்தில் உயர்த்தப் பட்டது. மேலும் கொரோனா காலத்தில், அவசியமற்ற பயணங்களை தடுக்கவே, கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில், குறிப்பிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், 'பிளாட்பார்ம் டிக்கெட்' கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது, குறைந்த துார ரயில்களின் குறைந்தபட்ச கட்டணத்திற்கு நிகராக உள்ளது.
ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டத்தை கட்டப்படுத்துவது மண்டல ரயில்வே அதிகாரியின் பொறுப்பாகும். குறிப்பிட்ட சமயங்களில் நடைமேடை அனுமதி சீட்டின் விலையை உயர்த்திக்கொள்ள 2015-ம் ஆண்டு முதல் மண்டல ரயில்வே அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: குறிப்பிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ரயில்வே ஸ்டேஷன்களில் அவசியமற்று, அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே, இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu