தமிழ் கற்க ஆசை! – நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலமாக அகில இந்திய வானொலியில், ஓவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் மனம் திறந்து உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் இன்று 74வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது உலகின் தொன்மையான மொழியான "தமிழ் கற்க ஆசை", தமிழை கற்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
தமிழ் இலக்கியத்தின் தரம் மற்றும் அதில் எழுதப்பட்ட கவிதைகளின் ஆழம் பற்றி பலர் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள். தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தது. தமிழ் கற்க வேண்டும் என நான் பலமுறை முயற்சி செய்தாலும் அதில் என்னால் வெற்றி பெற முடியவில்லை என தெரிவித்தார். இந்திய விளையாட்டுக்களின் வர்ணனைகளை பிராந்திய மொழிகளில் இருப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். விரைவில் தேர்வுகள் வர உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வுகள் குறித்து கவலை படாமல் சிரித்த முகத்துடன் தேர்வு எழுத வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu