அகமதாபாத்தில் நரேந்திரமோடி ஸ்டேடியம் திறப்பு
நரேந்திரமோடி விளையாட்டு மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அகமதாபாத் மோதிரா கிரிக்கெட் மைதானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் மோதிரா விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு இருந்த விளயாட்டு அரங்கு சுமார் 800 கோடி ரூபாய் செலவில் நவீன கட்டிடக்கலையுடன் உலகின் மிகப்பெரிய விளையாட்டு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு வளாகத்தால், அகமதாபாத் இந்தியாவின் விளையாட்டு நகரமாக புகழ் பெறும் என்றார்.
இந்த கிரிக்கெட் மைதானத்தில் 25 பேர் அமரக்கூடிய 75 கார்ப்பரேட் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் அகாடமி, 10 க்கும் அதிகமான பிட்சுகள் உருவாக்கப்பட்டுள்ளது. கால்பந்து, ஹாக்கி மற்றும் கூடைப்பந்து மைதானங்களும் இந்த வளாகத்தில் உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu