கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்களிப்பு அவசியம்: பிரதமர் மோடி
நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புது டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 6-வது ஆட்சிக் குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.கூட்டத்தில், முக்கிய அமைச்சர்கள், நிதி ஆயோக் ஆட்சிக் குழு உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக அவசியம். நாட்டின் முன்னேற்றத்தில், தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்பங்களிப்பை செய்து வருகின்றன.
கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய , மாநில அரசுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி கண்டன என்பதைப் பார்த்தோம். இளைஞர்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக நாட்டில், வங்கிக் கணக்குத் தொடங்குவோர், தடுப்பூசி மற்றும் சுகாதார வசதிகளைப் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை காண முடிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu