கல்வான் தாக்குதல்- வீடியோ வெளியிட்டது சீனா

கல்வான் தாக்குதல்- வீடியோ வெளியிட்டது சீனா
X

கல்வான் பள்ளத்தாக்கு இழப்பை ஒப்புக்கொண்ட சூழலில் மோதல் வீடியோவையும் சீன ராணுவம் வெளியிட்டுள்ளது .

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில், சீன தரப்பில் 5 முன்கள அதிகாரிகள், 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் சீன ராணுவம் வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!