நிதிஆயோக் கவுன்சில் கூட்டம்-நாளை நடக்கிறது

நிதிஆயோக் கவுன்சில் கூட்டம்-நாளை நடக்கிறது
X

நிதிஆயோக்கின் 6 வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை (பிப் 20ம் தேதி) நடக்கிறது.

நிதி ஆயோக் அமைப்பின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், வேளாண், உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டசத்து போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.துறைகளுக்கு இடையேயான விஷயங்கள், மாநிலங்களுக்கு இடையேயான விஷயங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை இந்த நிர்வாக கவுன்சில் கூட்டம் அளிக்கிறது.

இந்த கூட்டத்திற்கு, முதல் முறையாக லடாக், யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர், இதர யூனியன் பிரதேச நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் நிர்வாக கவுன்சில் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture