இரண்டு பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மாேடி

இரண்டு பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மாேடி
X

அசாமில் நாளை (பிப் 18 ம் தேதி) பிரதமர் மாேடி மஹாபாகு-பிரம்மபுத்ரா திட்டத்தைத் தொடங்கி வைத்து இரண்டு பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அசாம் மாநிலத்தில் நாளை பிரதமர் நரேந்திர மோடி மஹாபாகு-பிரம்மபுத்ரா திட்டத்தைத் தொடங்கி வைத்து, தூப்ரி புல்பாரி பாலத்துக்கு அடிக்கல் நாட்டி, மஜுலி பாலத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்கிறார். நியமட்டி - மஜுலி தீவுகளுக்கு இடையில், வடக்கு கெளகாத்தி - தெற்கு கெளகாத்தி இடையில், தூப்ரி - ஹட்சிங்கிமரி இடையில் ரோ-பாக்ஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே மஜுலிக்கும் ஜோர்ஹாட்டுக்கும் இடையில் இரு வழி பாலத்துக்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இந்தப் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்பது மஜுலி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. அசாமின் பிரதானப் பகுதிகளுக்குச் செல்வதற்கு இந்த மக்கள் பல தலைமுறைகளாக பரிசல் சேவையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
microsoft ai business school certificate