பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 32 பேர் பலி

பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 32 பேர் பலி
X

மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி பகுதியிலிருந்து சத்னாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்தது. இதில் 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 20 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai healthcare technology