குஜராத் முதல்வர் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்தார்
குஜராத்தின் வதோதராவின் நிஜம்புரா பகுதியில் இன்று விஜய் ரூபானி பிரச்சாரம் செய்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அவர் மயங்கி விழுந்தார். நல்ல வேலையாக அவர் கீழே விழுவதற்குள் அருகிலிருந்த காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர்.
இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். உடனடியாக அகமதாபாத் செல்லும் விஜய் ரூபானி, அங்கு மருத்துவமனைக்கு செல்வார் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர் குஜராத் முதல்வர் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த செய்தியை அறிந்ததும், பிரமதர் நரேந்திர மோடி விஜய் ரூபானியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். தற்போது விஜய் ரூபானியின் உடல்நிலை நலமாக உள்ளதாகவும் சில நாட்கள் அவர் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu