தேவேந்திரகுல வேளாளர் மசோதா- மக்களவையில் அறிமுகம்

தேவேந்திரகுல வேளாளர் மசோதா- மக்களவையில் அறிமுகம்
X

ஏழு சமூக பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க சட்ட திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயர் மீதான சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்ற ஏழு சமூகப்பிரிவுகளை இனி, 'தேவேந்திரகுல வேளாளர்' எனும் பெயரில் அழைப்பதற்கான ஷரத்து இடம் பெற்றுள்ளது.இதை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சரான கிருஷண் பால் தாக்கல் செய்தார். அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 8-ல் துவங்கும்போது இந்த சட்டத் திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story