டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
X

வகுப்பு மோதலை தூண்டும் பதிவுகள் டுவிட்டரில் வெளிவர கூடாது என டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வகுப்பு மோதல், ஜாதி வெறி மற்றும் பிரிவினைவாத போக்கு அடங்கிய பதிவுகளை டுவிட்டர் வெளியிடுவதை தடுக்க, அரசு சட்டபூர்வ விதிகளை வகுக்க வேண்டும் என தாக்கலான பொதுநல மனுவில், பதிலளிக்குமாறு டுவிட்டருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு, மும்பையில் உள்ள டுவிட்டரின் இந்திய தலைமை அலுவலகத்திற்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.அரசின் உத்தரவைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டம் குறித்த ஆட்சேபத்திற்குரிய பதிவுகளை டுவிட்டர் முடக்கி வரும் நிலையில், பொதுநல வழக்கு வாயிலாக அதற்கு அடுத்த கட்ட நெருக்கடி உருவாகி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture