மத்திய ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தஜகிஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
தஜகிஸ்தானில் உள்ள முர்காப் என்ற இடத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 3 ஆக பதிவானது. இந்தநிலையில் இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிலும் உணரப்பட்டன. மேலும் இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu