ட்விட்டர் இந்தியா நிர்வாகிகள் கைதாக வாய்ப்பு ?

ட்விட்டர் இந்தியா நிர்வாகிகள் கைதாக வாய்ப்பு ?
X

விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் நிலையில் ட்விட்டர் இந்தியா நிர்வாகிகள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியஅரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த குடியரசு தினத்தன்று, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். போராட்டம் தொடர்பான சிலரின் அவதூறு பக்கங்களை நீக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திடம் இந்திய அரசு வலியுறுத்தியது.இதையடுத்து சிலரின் பக்கங்களை ட்விட்டர் நீக்கினாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் கணக்குகள் செயல்பட அனுமதி அளித்தது. இதனால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, 1,178 பேரின் கணக்குகளை முடக்க ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் ட்விட்டர் கணக்குளை நீக்கும் பணியை ட்விட்டர் தாமதப்படுத்தியதால், ட்விட்டர் இந்தியாவின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ட்விட்டர் கணக்குகளை நீக்குவதை தாமதப்படுத்தியதால் தங்கள் பொறுமையை இழந்துவிட்டதாக அரசாங்கம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!