குற்றங்களை தடுக்க வருகிறது "சைபர் கிரைம் செல்"
மத்திய உள்துறை அமைச்சகம் 'சைபர் கிரைம் செல்' என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. நாட்டின் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்களாக பங்கேற்க முடியும். இந்த திட்டத்தின்படி, குழந்தை ஆபாசப் படம், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகள், கருத்துகள், உள்ளடக்கங்களை கண்டுப்பிடிக்கவும், சட்டத்தை மீறும் பிரசாரங்கள், செய்திகள் குறித்து அடையாளம் காணவும் குடிமக்களையே 'சைபர் கண்காணிப்பாளர்'களாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவை குறித்து தன்னார்வலர்களாக நியமிக்கப்படும் குடிமக்கள் ரிப்போர்ட் செய்ய முடியும். சோதனை அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர், திரிபுரா உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வரவேற்பை அடிப்படையாக கொண்டு, இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமானது (I4C) இணைப்புப் புள்ளியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu