பிச்சை குறித்த வழக்குகள்- உச்சநீதிமன்றம் ஏற்பு

பிச்சை குறித்த வழக்குகள்- உச்சநீதிமன்றம் ஏற்பு
X

பிச்சை குறித்து மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என சட்டம் இயற்றிய மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பிச்சை எடுப்பது விருப்பத்தின் பேரில் செய்வதல்ல, சந்தர்ப்ப சூழலே இத்தகைய மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம். பிச்சை எடுப்பதை கிரிமினல் குற்றமாக அறிவிப்பது என்பது அவர்களுக்கு மேலும் அழுத்தம் தரும் வகையில் அமைந்து விடும் என்று பல்வேறு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Tags

Next Story