இந்தியா, இங்கிலாந்து வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியா, இங்கிலாந்து நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல், சர்வதேச வர்த்தகத்திற்கான இங்கிலாந்து அமைச்சர் எலிசபெத்ட்ரஸ் ஆகியோர் புதுடெல்லியில் சந்தித்து, இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதில் இரண்டு நாடுகளின் வர்த்தகம் சார்ந்த விஷயங்களின் பரஸ்பர புரிதலுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இந்தியா- இங்கிலாந்து இடையேயான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டணியின் வாயிலாக இரண்டு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் 2 அமைச்சர்களும் உறுதி அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu