வறுமையை ஒழிக்க மத்தியஅரசு உறுதி- பிரதமர் மோடி

வறுமையை ஒழிக்க மத்தியஅரசு உறுதி- பிரதமர் மோடி
X

இந்தியாவில் வறுமையை அறவே ஒழிப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நாடு வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் வறுமையை அறவே ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

ஜனாதிபதியின் உரையைக் கேட்காமலேயே பலரும் அது குறித்து விமர்சனம் செய்கிறார்கள். அவரது உரை என்பது மிகவும் வலிமையானது என்பதாலேயே, அதைக் கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்துவிடுகிறது. ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!