மும்பை தானே அம்பர்நாத்தில் ஆலயம் கட்டி கும்பாபிசேகம் செய்த தமிழர்கள்

மும்பை தானே அம்பர்நாத்தில் ஆலயம் கட்டி கும்பாபிசேகம் செய்த தமிழர்கள்
X
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னாள், தமிழகத்தின் அன்றைய ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து நிறைய பேர் வேலை தேடி மும்பைக்குச் சென்றனர். மும்பையில் உள்ள தானே மாவட்டத்தில் அம்பர்நாத் என்ற ஊரில் டெக்ஸ்டைல்ஸ் வேலைக்கு சென்றனர்.

திருவண்ணாமாலை, வேலூர், திருப்பத்தூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய வட ஆற்காடு மாவட்டம். இத்தோடு ஆம்பூர், வாணியம்பாடி, வந்தவாசி, குடியாத்தம், ஆரணி ஆகிய பகுதிகளில் இருந்தும் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு வேலை செய்வதற்காக அப்போது சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் இங்கிருந்து சென்றன.


மும்பை அம்பர்நாத் பகுதியில் கடுமையாக உழைத்து முன்னேறினார்கள். அடுத்த தலை முறை அவர்களது குழந்தைகள் நன்றாக படித்து அங்கே அரசு அலுவர்களாகவும், பிற துறையிலும் சாதித்தனர். மும்பை அம்பர்நாத் பகுதிக்கு சென்றால் தமிழ் நாட்டில் இருப்பது போலத்தான் தோன்றும். அவர்களது பேச்சு, பழக்க வழக்கம் எல்லாம் வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தே இன்றும் இருக்கிறது. மும்மை வாழ் தமிழராக தமிழ் பேசுகின்றனர். மூன்றாவது தலைமுறையில் சிலருக்கு தமிழ் எழுத படிக்க தெரிகிறது.. சிலருக்கு பேச மட்டும் தெரிகிறது. தமிழ் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் அங்கும் இருக்கிறது. மராட்டிய மக்களுடன் இணைந்து சிறப்பாக வாழ்கின்றனர். ஆனாலும் பழக்க வழக்கங்கள் பாரம்பரியங்கள் அப்படியே தொடர்கிறது.


25 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு தமிழர்கள் சார்பாக விநாயகர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து வழிபட்டனர். 2001 இல் அதற்கு கும்பாபிசேகம் செய்தனர். அந்த கோவிலில் விரிசல் ஏற்படவே, ஆலயத்தை புதுப்பித்து கட்ட விரும்பினார்கள். அதற்கு தமிழகத்தை சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஸ்தபதிகள், கலைச்செம்மல் கீர்த்திவர்மன் பெருந்தச்சன் மற்றும் ஆதித்ய வர்மன் பெருந்தச்சன் அவர்களிடம் திருப்பணியை ஒப்படைத்தனர். அவர்களுடன் 23 சிற்பிகள் வேலைக்கு சென்றார்கள்.


ஜனவரி 6ஆம் தேதி துவங்கிய ஆலய பணி 30 ம் தேதி நிறை வடைந்தது. இடையில் பொங்கல் விடுமுறையும் வந்தது. ஆலய கட்டிட வேலைகளை அதற்குள் முடித்து கும்பாபிசேகத்திற்கு தயார்படுத்தி கொடுத்தார்கள். இதனை அங்குள்ள தமிழர்கள் வெகுவாக பாராட்டி பெருமை படுத்தினார்கள்.

கட்டுமான பணிகளை முடித்த கலைச்செம்மல் கீர்த்திவர்மன் மற்றும் ஆதித்ய வர்மன் பெருந்தச்சன் மும்பை தமிழர்களுக்கு பூமி பூஜை முதல், ஆலய ஆகம விதிகள், பூஜா விதிகள் வரை எல்லாவற்றையும் சொல்லி கொடுத்து முறைப்படி ஆலயத் திருப்பணி சிறப்பாக செய்து கொடுத்ததை மிகவும் வெகுவாக பாராட்டினார்கள்

செல்வவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் மூலவராகவும், சிவன்,சக்தி, தட்சிணாமூர்த்தி, காலபைரவர் நவகிரகங்கள் உட்பட எல்லா சன்னதிகளும் சிறப்பாக அதற்குரிய ஆகம முறைகளுடன் பிரதிஷ்டை செய்தனர்..

கும்பாபிசேகத்திற்கு தமிழகத்தில் இருந்து சிவாச்சாரியர்கள் வேண்டும் என்று அவர்கள் விரும்பி சிவாச்சாரியர்களை அழைத்து சென்று பிப்ரவரி 5 ம் தேதி கும்பாபிசேகம் சிறப்பாக நடை பெற்றது. தமிழர்கள் மட்டும் இன்றி மராட்டியர்களும் ஆலய கும்பாபிசேகத்தில் கலந்து கொண்டனர். மயிலாட்டம், காவடி, பால்குடம், என பக்தர்கள் வீதி வலம் வந்தனர். வெகு சிறப்பாக ஆலய திருவிழா கொண்டாடப்பட்டது.

இத் திருப்பணியை மனோகரன், நாராயணன், விஜயன் மற்றும் அங்கு வாழும் தமிழர்கள் அனைவரும் முன்நின்று திருப்பணி சிறப்பாக நடைபெற செயல்பட்டன.

Tags

Next Story
ai and business intelligence