உலகிற்கு வாய்ப்பளிக்கும் இந்தியா -ராம்நாத்கோவிந்த்

உலகிற்கு வாய்ப்பளிக்கும் இந்தியா -ராம்நாத்கோவிந்த்
X

இந்தியா இன்று சந்தை மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு பாதுகாப்புத்துறை உள்பட ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும் பூமி என ஏரோ இந்தியா கண்காட்சியின் நிறைவு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா-21 கண்காட்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில், உலகளவில் இந்தியாவின் வலிமை வளர்ந்து வருவதற்கு இந்த ஏரோ இந்தியா-21 கண்காட்சியே சான்றாக உள்ளது.பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலைகள் அமைக்கவும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் இரண்டு பாதுகாப்பு வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சிகள் எல்லாம், நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியாவை தற்சார்பு பாதைக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இன்று சந்தை மட்டுமல்ல,உலக நாடுகளுக்கே பாதுகாப்புத்துறை உள்பட ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும் பூமி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!