விவசாயிகள் நாட்டு வளர்ச்சிக்கு முக்கியம்: பிரதமர் மோடி

விவசாயிகள் நாட்டு வளர்ச்சிக்கு முக்கியம்: பிரதமர் மோடி
X

நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் செளரி செளரா நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. இந்தியாவை சுயசார்பு நாடாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது, நன்மையே செய்யும். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் வேளாண் மண்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.நாட்டின் ஒற்றுமையே நமது முன்னுரிமை என்று நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுடனும் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!