விமானபடைக்கு தேஜஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

விமானபடைக்கு தேஜஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்
X

இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 தேஜஸ் இலகு ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

பெங்களூருவில் இன்று சர்வதேச விமானக் கண்காட்சி தொடங்கியது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில், 83 விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.இந்த விமானங்கள் 2024ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் தலைவர் மாதவன் கூறியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!