பெங்களூருவில் ஏரோ இந்தியா கண்காட்சி துவக்கம்

ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி, பெங்களூரில் இன்று தொடங்கியது.

பெங்களூருவில் ஏரோ இந்தியா கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். எலஹங்கா விமானப்படை தளத்தில் இந்த கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 540 நிறுவனங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. அதிக செயல்திறன் மிக்க கம்ப்யூட்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், நிலம் மற்றும் கடற்சார் பொருட்கள் மற்றும் கருவிகள், லேசர் அடிப்படையிலான தகவல் தொடர்பு சாதனங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
ai marketing future