வெளிப்படையான பட்ஜெட் :நிா்மலா சீதாராமன்

வெளிப்படையான பட்ஜெட் :நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் வெளிப்படையானது எதையும் மறைக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான் மத்திய நிதியமைச்சராக பதவியேற்றது முதல் இதுவரை மத்திய அரசின் வரவு-செலவு கணக்குகள் வெளிப்படையாக உள்ளன. எதுவும் மறைக்கப்படவில்லை. அரசின் வரவு-செலவு கணக்குகளை ஆவணப்படுத்துவது தற்போது மிக வெளிப்படையாக நடைபெறுகிறது.வரும் நிதியாண்டுக்கான மூலதன செலவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக தேவையை அதிகரிப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story