போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைசர் கொடுத்த சுகாதார ஊழியர்கள்

போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைசர் கொடுத்த சுகாதார ஊழியர்கள்
X
மகாராஷ்டிரா மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைசர் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாடு தழுவிய அளவில் ஞாயிறு அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் தவறுதலாக சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி கொடுத்துள்ளனர். ஒரு குழந்தை வாந்தி எடுக்க, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. பரிசோதித்தபோது கிருமி நாசினி வழங்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சுகாதார ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story