தேசிய மாணவர்படை நிகழ்ச்சி ! பிரதமர் மோடி பங்கேற்பு

தேசிய மாணவர்படை நிகழ்ச்சி ! பிரதமர் மோடி பங்கேற்பு
X

எல்லை பகுதிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த தேசிய மாணவர் படையினர் ஒரு லட்சம் பேருக்கு முப்படையினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, புயல் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது தேசிய மாணவர் படையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததை நினைவுகூர்ந்தார். கொரோனா தொற்றுக் காலத்தில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் அரசுடனும், சமுதாயத்துடனும் இணைந்து செயல்பட்டது பாராட்டத் தக்கது.

நாட்டின் எல்லை பகுதிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக தேசிய மாணவர் படையினர் ஒரு லட்சம் பேருக்கு முப்படையினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!