தடையை மீறி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள்

தடையை மீறி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள்
X

போலீசாரின் தடையை மீறி டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகளினால் பதற்றம் நிலவி வருகிறது.

டெல்லியில் இன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியால் கடும் பரபரப்பு,பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டு,தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடிக் கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பி வந்தனர்.குடியரசு தின விழா கொண்டாட்டம் ஒருபுறம் நடந்து வந்த நிலையில், போலீசார் – விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!