விவசாயிகள் மீது பூக்களை தூவி வரவேற்பு

விவசாயிகள் மீது பூக்களை தூவி வரவேற்பு
X

டெல்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள் மீது உள்ளூர் மக்கள் பூக்களைத் தூவி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், காசிப்பூர் எல்லைக்கு அருகிலுள்ள ஸ்வரூப் நகரில் உள்ள மக்கள், அவ்வழியே வந்த விவசாயிகள் மீது மலர்களைத் தூவினர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!