தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுதலைவர்
நாட்டின் 72-வது குடியரசு நாளை முன்னிட்டு, புது டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.
புது டெல்லி ராஜ்பாத்தில், நாட்டின் 72-வது குடியரசு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். குடியரசு நாள் விழாவில் இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு, துணை ராணுவப் படை வீரர்கள், டெல்லி காவல்துறையினரின் வீரநடை, தேசிய பாதுகாப்புப் படை வீரர்களின் உற்சாக அணிவகுப்பும், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒட்டக அணிவகுப்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. 1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu