/* */

டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்

டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்
X

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினர்.

மத்தியஅரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் இன்று மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி - ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியை தொடங்கினர்.11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா , பவானா , அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும்.

இதையடுத்து திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ , நஜாப்கர் , மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும். மூன்றாவதாக டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி , காஜியாபாத் , பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோமீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 26 Jan 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்