கமலா பெயர் உள்ளவர்களுக்கு வொண்டர்லா அனுமதி இலவசம்

கமலா பெயர் உள்ளவர்களுக்கு வொண்டர்லா அனுமதி இலவசம்
X
கமலா ஹாரிஸூக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அதிரடி அறிவிப்பு - கமலா, கமல், கமலம், கமலி உள்ளிட்ட கமலா என்ற பெயர்களை கொண்டவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது



அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸூம் வெற்றி பெற்று கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்றனர். இதில் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பூர்வீகம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும்.

தனக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பை கமலா ஹாரிஸ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற அன்று அக்கிராம மக்கள் திருவிழாப் போல கொண்டாடினர். மேலும் அவருக்கு பலரும் தங்களை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தீம் பார்க் நிறுவனமான வொண்டர்லா கமலா ஹாரிஸூக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கமலா, கமல், கமலம், கமலி உள்ளிட்ட கமலா என்ற பெயர்களை கொண்டவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ளது. அதாவது தனது கொச்சி, பெங்களூரு,ஹைதராபாத் கிளைகளில் வரும் முதல் 100 கமலா பெயர்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவித்துள்ளது.

Next Story