இறுதி கட்டத்தை நெருங்கும் பட்ஜெட் தயாரிப்பு !

இறுதி கட்டத்தை நெருங்கும் பட்ஜெட் தயாரிப்பு !

டெல்லியில் மத்திய பட்ஜெட் இறுதி கட்டத்தை குறிக்கும் அல்வா விழா நடைபெற்றது.

மத்திய பட்ஜெட் 2021-22 தாக்கல் செய்யும் இறுதி கட்டத்தை குறிக்கும் வகையில் ,அல்வா விழா இன்று மதியம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்றது. பட்ஜெட் தயாரிப்பு லாக்-இன் செயல்முறை தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வழக்கமான அல்வா விழா செய்யப்படுகிறது.பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும் மத்திய பட்ஜெட்டுக்கான மொபைல் செயலியையும் நிதியமைச்சர் துவக்கி வைத்தார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அது குறித்த தகவல்கள் வெளியே வராமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story