ஜம்முவில் பனிப்பொழிவு,வீடுகளில் முடங்கிய மக்கள்

ஜம்முவில் பனிப்பொழிவு,வீடுகளில் முடங்கிய மக்கள்
X

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவோடு, மழையும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவி வருகின்றது. பொதுமக்கள் வீடுகளுக்கு உடையே முடங்கியுள்ளனர்.

ஜம்மு சமவெளிகளில் கடும் பனியோடு, மழை பெய்து வருவதால், பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜம்மு சமவெளியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காஷ்மீர் மற்றும் ஜம்மு மலைப்பகுதிகளில் அதிகப்படியான பனிப்பொழிவு நிலவும் என்றும், நாளை முதல் வானிலை சற்று மேம்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஸ்ரீநகரில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸாகவும், பஹல்காமில் மைனஸ் 1.3 மற்றும் குல்மார்க்கில் மைனஸ் 4.8 ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாகப் பதிவாகியுள்ளது.

Tags

Next Story