நேதாஜிபிறந்த நாள் பிரதமர் மோடி பெருமிதம்

நேதாஜிபிறந்த நாள் பிரதமர் மோடி பெருமிதம்
X

ஹரிபுராவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சி நேதாஜி நமது தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை ஒட்டி, நாடு முழுக்க பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம் ஹரிபுராவில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கும் அந்த நிகழ்ச்சியில் இணைந்திடுங்கள் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்வில் ஹரிபுராவுக்கு விசேஷமான ஒரு தொடர்பு இருக்கிறது. 1938-ல் ஹரிபுராவில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நேதாஜி ஏற்றுக் கொண்டார்.

இன்று ஹரிபுராவில் நடைபெறும் நிகழ்ச்சி, நேதாஜி போஸ் இந்த தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்கு மரியாதை செய்வதாக இருக்கும். மக்களை மையமாகக் கொண்ட அவருடைய செயல்பாடுகள், வரக்கூடிய ஆண்டுகளில் இந்த உலகை இன்னும் நல்லதாக ஆக்கிட ஊக்குவிப்பதாக இருக்கட்டும் என்றும் தனது ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!