கல்குவாரி விபத்து: விசாரணைக்கு ராகுல் வலியுறுத்தல்

கல்குவாரி விபத்து: விசாரணைக்கு ராகுல் வலியுறுத்தல்
X

கர்நாடகத்தில் நிகழ்ந்த கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தின் ஹுனசோடு பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகள் உடைக்கும் இடத்தில் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியது. இவ்விபத்தில் இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் விரிவான விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவதன் மூலமே எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture