லக்னோவில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

லக்னோவில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
X

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சாகித் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து பீகாரின் ஜெய்நகருக்குச் சென்ற சாகித் விரைவு ரயில் லக்னோ சார்பாக் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சற்றுத் தொலைவு சென்றபோது திடீரென 2 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மெதுவாகச் சென்றதாலும், உடனடியாக நிறுத்தப்பட்டதாலும் பயணிகள் எவருக்கும் காயம் இல்லை. தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகளை மற்ற பெட்டிகளில் ஏற்றிய பின் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

Tags

Next Story
ai in future agriculture