டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர்

டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர்
X

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்கள் பயணமாக டெல்லி சென்றடைந்தார்.

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி 2 நாள்கள் பயணமாக டெல்லிக்கு இன்று மதியம் சென்றார். உள்துறை அமைச்சா் அமித் ஷாவை முதல்வா், திங்கள்கிழமை இரவு 7.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்திக்கிறாா். பின், செவ்வாய்க்கிழமை காலை பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமருக்கு அழைப்பு விடுக்க உள்ளாா். முன்னதாக டெல்லி சென்றடைந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!