வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கவில்லை: ப. சிதம்பரம்

வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கவில்லை:   ப. சிதம்பரம்
X

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது:வேளாண் சட்டங்கள் குறித்த உண்மை என்னவென்றால் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. குறிப்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. வேளாண் சட்டங்கள் அவசர சட்டங்களாக நிறைவேற்றுவதற்கு முன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் அவை பொய் என்பது ஆர்டிஐ-இன் பதில்கள் மூலம் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குரிய சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக்கொள்ளாததால், அரசிடம்தான் தவறு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்