ராமர் கோவில் பணிகள்- முக்கிய தலைவர்கள் நன்கொடை

ராமர் கோவில் பணிகள்- முக்கிய தலைவர்கள் நன்கொடை
X

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு தன் பங்களிப்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஐந்து லட்சத்து, 100 ரூபாய் வழங்கினார். அது போல் மத்திய பிரதேச முதல்வர், உபி முதல்வர் ஆகியோரும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

அயோத்தியில், பகவான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு நாடு முழுதும் ஐந்து லட்சத்து, 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ராமர் கோவில் கட்டுவதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஐந்து லட்சத்து, 100 ரூபாயை வழங்கினார். ஜனாதிபதி மாளிகையில் அவரை சந்தித்த, வி.எச்.பி., அமைப்பின் தலைவர் அலோக் குமார், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த்தேவ் கிரி உள்ளிட்ட நிர்வாகிகளிடம், இந்த தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.

அது போல் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான தனது பங்களிப்பாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் தேஸ்கான் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர பகதூர் சிங், கோயில் கட்டுமானத்திற்கான தனது பங்களிப்பாக ஒரு கோடியே 11 லட்சத்து, 11 ஆயிரத்து 111 ரூபாய்க்கான (1,11,11,111) காசோலையை வழங்கினார்.

மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ,குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் மாநில ஆளுநர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை அளித்துள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு